அண்ணா மேம்பாலத்தில் பேருந்து விபத்து

புதன், சூன் 27, 2012

சென்னையில் உள்ள அண்ணா மேம்பாலத்தில் மாநகர பேருந்து கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 39 பயணிகள் காயமடைந்தனர். காயமடந்தவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


சென்னை மாநகரப் பேருந்து 17-எம், மேம்பாலத்தில் வளைவான சாலையில் செல்லும்போது திடீரென பேருந்து தனது கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்தது. இதில், பயணிகள் 39 பேர் காயமடைந்தனர். 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.


மூலம் தொகு