அட்லாண்டிசு விண்கலத்தின் இறுதிப் பயணம்

சனி, சூலை 9, 2011

நாசாவின் அட்லாண்டிஸ் விண்ணோடம் நேற்று வெள்ளிக்கிழமை 11:29 மணிக்கு விண்ணுக்கு கடைசித் தடவையாக ஏவப்பட்டது.

எஸ்டிஎஸ்-135 விண்வெளி வீரர்கள்

12 நாட்கள் நீடிக்கும் இக்கடைசிப் பயணத்தின் போது பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு வேண்டிய உபகரணங்கள், சரக்குகளைக் கொண்டு செல்வது, மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


நான்கு விண்வெளி வீரர்கள் இத்திட்டத்தில் இணைந்து விண்ணுக்குச் செல்கிறார்கள். கிறிஸ்டோபர் ஃபேர்கசன், டக்லஸ் ஹேர்லி, சேண்ட்ரா மாக்னசு, ரெக்ஸ் வால்ஹைம் ஆகியோர் சென்றுள்ளனர்.


முதலாவது விண்ணோடப் பயணம் 1981 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 இடம்பெற்றது. கடந்த 30 ஆண்டுகளாக 135 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு இரண்டு பயணங்கள் விபத்தில் சிக்கின. சலேஞ்சர் விண்ணோடம் சனவரி 1986 இலும், கொலம்பியா விண்ணோடம் பெப்ரவரி 2003 இலும் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர்.


16 நாடுகளைச் சேர்ந்த 355 விண்வெளி வீரர்கள் இத்திட்டங்களில் பங்கேற்று 852 தடவைகள் விண்வெளிக்குச் சென்றுள்ளனர். 26 ஆண்டுகளாக விண்ணுக்கு அனுப்பட்டுள்ள அட்லாண்டிஸ் விண்ணோடம் 33 தடவைகள் ஏவப்பட்டது.


மூலம் தொகு