65 ஆண்டுகளாக அழிந்துவிட்டதாக கருதப்பட்ட தேவாங்கு இலங்கையில் கண்டுபிடிப்பு
புதன், சூலை 21, 2010
தொடர்புள்ள செய்திகள்
- 8 பெப்பிரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 23 பெப்பிரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- 15 பெப்பிரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
- 14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது
- 26 திசம்பர் 2016: இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது
65 ஆண்டுகளாக அழிந்துவிட்டது எனக்கருதப்பட்ட இலங்கையின் ஓடன் சமவெளி தேவாங்கு (Loris tardigradus nycticeboides) தற்போது இலங்கையில் வாழ்வது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இத்தேவாங்கு இலங்கையில் 1939 ஆம் ஆண்டு கடைசியாக காணப்பட்டது. இலங்கையின் இயற்கை காடுகள் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டதால் இவ்விலங்கின் வாழ்விடம் சுருங்கி அற்றுப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இலங்கையின் ஓடன் சமவெளிப் பகுதியில் 120 இடங்களில் நடத்தப்பட்ட சுமார் 3 ஆண்டிற்கும் மேற்பட்ட ஆய்வில் இவ்விலங்கு இருப்பதை ஆய்வியலாளர்கள் புகைப்படத்துடன் உறுதிசெய்துள்ளனர். மேலும் தற்சமயம் இவற்றின் இயற்கை உயிர்த்தொகை நூற்றிற்கும் குறைவானதாகவே இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மூலம்
தொகு- Slender hope: A tiny primate is rediscovered after 65 years, சயிண்டிபிக் அமெரிக்கன், ஜூலை 19, 2010
- First ever pictures of mysterious mammal, இலண்டன் விங்கியல் அமைப்பு, ஜூலை 19, 2010