2020 கேரளா ஏர் இந்தியா விமான விபத்து
இரண்டாக பிளந்த ஏர் இந்தியா வந்தே பாரத் விமானம்.. இதுவரை 17 பேர் பலி.. கொரோனாவிலிருந்து தப்பி விபத்தில் இறந்த பரிதாபம்.. வெளிநாடு வாழ் இந்தியர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வரும் வந்தே பாரத்' திட்டத்தின் கீழ், துபாயில் இருந்து, கேரளாவிற்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் விமானம், நேற்றிரவு வந்தது.
இதில், 174 பயணியர் உட்பட, 191 பேர் இருந்தனர். இந்த விமானம், மலப்புரம் மாவட்டம், கோழிக்கோடு அருகே உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில், நேற்று இரவு, 7:40 மணிக்கு தரைஇறங்கியபோது விபத்துக்குள்ளானது. ஓடுபாதையில் இருந்து விலகி, பள்ளத்தில் விழுந்து, இரண்டாக பிளந்தது.
இந்த விபத்தில், பைலட் உட்பட, 17 பயணியர் பலியாயினர்; 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இந்த விபத்து குறித்து மத்திய உள்நாட்டு விமான போக்குவரத்துதுறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஏ.ஏ.ஐ.பி.) எனப்படும் விமான விபத்து குறித்த விசாரணைக்குழு விசாரணையை துவக்கியது.
இந்த விபத்து பொலவே 2010ல் கோழிக்கோடு விமான நிலையத்தில் நிகழ்ந்த விபத்தை இது நினைவு படுத்துகிறது.
2010-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி, துபையில் இருந்து மங்களூர் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், நொறுங்கி விபத்துக்குள்ளானது. போயிங் ரகத்தை சேர்ந்த அந்த விமானம், விழுந்ததில் 152 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் உயிரிழந்தனர். அதில் 8 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
இந்த விபத்து குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி ட்விட்டரில் கூறியது, நடந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. மீட்பு பணிகள் நிறைவடைந்தன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து முறையான விசாரணை நடத்த விமான விபத்து தொடர்பான (ஏ.ஏ.ஐ.பி.)விசாரணை குழுவினர் இரண்டு பிரிவுகளாக இன்று கோழிக்கோடு சென்று விசாரணையை துவக்கி முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர், என்று கூறியுள்ளார்.
மூலம்
தொகு- [1]இரண்டாக பிளந்த ஏர் இந்தியா வந்தே பாரத் விமானம்.. இதுவரை 17 பேர் பலி.. கொரோனாவிலிருந்து தப்பி விபத்தில் இறந்த பரிதாபம்.. | TamilNews 24x7.com Saturday, Aug 08,2020 ,07:02:14am