2020 இலங்கை தேர்தல்

மொத்த இலங்கையையும் கைப்பற்றிய ராஜபக்சே குடும்பத்தினர்.. அண்ணன் பிரதமர், தம்பி அதிபர்..

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் கோத்தபயா ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே குடும்பத்தினரின் லங்கா மக்கள் கட்சி, மூன்றில் 2 பங்கு இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றுள்ளது.

இலங்கையில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. மொத்தம் 22 மாவட்டங்களில், 225 இடங்களில், கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர்த்து, 196 இடங்களுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

துவக்கத்திலிருந்தே இலங்கை மக்கள் கட்சி, அதிகமான இடங்களில் முன்னணியில் இருந்தது. சிங்களர்கள் அதிகமாக வசிக்கும் தெற்கு பகுதியில் 60 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளை பெற்று, இலங்கை மக்கள் கட்சி, அபார முன்னணியை பெற்றது. மொத்தம் 145 இடங்களை கைபற்றி ராஜபக்சே கட்சி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், இலங்கை முழுவதும் ராஜபக்சே குடும்பத்தின் வசமாகி இருக்கிறது. முன்னமே, மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே, கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக இருக்கிறார். தற்போது மகிந்த ராஜபக்சேவும் பிரதமர் பதவியை ஏற்க உள்ளார்.

இவருடைய வெற்றிக்கு நேற்றிரவே பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அதற்கு ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்.

இத்தேர்தலில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, படுதோல்வியை சந்தித்துள்ளது. ஒரு இடத்தில் கூட இது வெற்றி பெறவில்லை.

மூலம் தொகு

  • [1] மொத்த இலங்கையையும் கைப்பற்றிய ராஜபக்சே குடும்பத்தினர். | TamilNews 24x7.com Saturday, Aug 08,2020 ,07:07:54am
"https://ta.wikinews.org/w/index.php?title=2020_இலங்கை_தேர்தல்&oldid=52735" இலிருந்து மீள்விக்கப்பட்டது