17ம் நூற்றாண்டு இலங்கை சுங்கான் பெட்டி லண்டனில் அதிக விலைக்கு ஏலம் போனது
திங்கள், செப்டெம்பர் 27, 2010
- 16 பெப்பிரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு
- 20 சனவரி 2018: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்
- 7 சனவரி 2018: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை
- 2 சனவரி 2018: சௌதி அரேபியாவும் அமீரகமும் மதிப்பு கூட்டல் வரியை கொண்டுவந்தன
- 17 பெப்பிரவரி 2017: சாம்சங் குழும அதிபர் ஊழல் குற்றச்சாட்டில் கைதானார்
பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கை சித்திர வேலைப்பாடுடன் கூடிய சுங்கான் பெட்டி ஒன்று லண்டனில் விற்பனை செய்யப்பட்டது.
யானைத் தந்தத்தினால் செய்யப்பட்ட இந்தச் சுங்கான் பெட்டி £51,650 ($80,300) விலைக்குப் போனது. இது முன்னர் £8,000-£12,000 ($12,400-$18,600) வரையே மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இது 21 அங்குலம் (53 சமீ) நீளமுடையதாகும்.
கிறிஸ்டி என்ற ஏல விற்பனை நிறுவனத்தினால் விற்கப்பட்ட இந்தச் சுங்கான் பெட்டியை வாங்கியவரின் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
வழமைக்கு மாறான புகை பிடிக்கும் குழாய்களில் நான்கு குழாய்களே உலகில் எஞ்சியுள்ளன. இவற்றில் ஒன்று லண்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பேர்ட் அருங்காட்சியகத்திலும், மேலும் இரண்டு நெதர்லாந்தில் உள்ள டி மொரியான் அருங்காட்சியகத்திலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
2008 ஆம் ஆண்டில் இறந்த டிரெவர் பார்ட்டன் என்பவரின் 50 ஆண்டுகால சேகரிப்பில் இந்த இலங்கைச் சுங்கான் பெட்டி இருந்து வந்தது.
மூலம்
- Sri Lankan pipe case sells for record price in UK, பிபிசி, செப்டம்பர் 23, 2010