17ம் நூற்றாண்டின் சீனத் தாமரைக் கிண்ணம் 9 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விற்பனை

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

புதன், ஏப்பிரல் 10, 2013

ஹாங்காங் சோத்பி ஏல மையத்தில், 1662-1722 ஆண்டு காலத்தில் சீனாவை ஆண்ட பேரரசர் காங்ஜி பயன்படுத்திய அபூர்வ வகை சிகப்பு தாமரை கிண்ணம் ஏலத்துக்கு வந்தது.


இளம்சிகப்பு, மஞ்சள் மற்றும் ஊதா நிறத்துடன் வரையப்பட்ட இந்தத் தாமரை கிண்ணத்தை, ஹாங்காங் பீங்கான் பொருட்கள் விற்பனையாளர் 9.5 மில்லியன் டாலருக்கு (சுமார் 52 கோடிக்கு) ஏலம் எடுத்தார்.


கடந்த ஆண்டு இதுபோன்று பூ வடிவிலான அரசர் காலத்து வண்ணக்கிண்ணமும் 27 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது.


மூலம்

தொகு