வர்த்தக மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக தமிழர் ஒருவர் நியூயார்க்கில் கைது

சனி, அக்டோபர் 17, 2009


இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் பங்கு சந்தை வர்த்தக முதலீட்டாளராக விளங்கும் ராஜ் ராஜரத்தினம் என்ற தமிழர் உட்பட ஆறு பேர் மீது நியூயோர்க்கின் நீதிமன்றம் ஒன்று குற்றச்சாட்டொன்றை (Hedge fund insider trading scheme) சுமத்தியுள்ளது.


அதிக லாபம் ஈட்டித்தரும் முதலீட்டு வகைகளில் இரகசியத் தகவல்களை சட்டவிரோதமாகக் கசியவிட்டு சந்தை நிலவரத்தை செயற்கையாக மாற்றி இலாபம் தேடியது என்ற குற்றத்தை பங்கு சந்தை சரித்திரத்தில் இதுவரை இல்லாதபடிக்கு மிகப் பெரிய அளவில் இவர்கள் செய்துள்ளார்கள் என்று கருதப்படுகிறது.


ராஜ் ராஜரத்தினம் உலகப் பிரசித்தி பெற்ற கெலொன் நிறுவனத்தின் உரிமையாளரும், உலக செல்வந்த வரிசையில் 559ஆம் இடத்தை வகிப்பவரும் ஆவார்.


2006ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற இவ்வாறான சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் 20 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்