ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - அருட்பா மருட்பா பற்றிய செய்தி

திங்கள், ஆகத்து 17, 2009, சென்னை, தமிழ்நாடு:


சென்னை வார விழாவை முன்னிட்டு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் தமிழ்நாட்டில் காந்தி என்ற கண்காட்சி ஆகஸ்டு 15 முதல் ஆகஸ்டு 23 வரை நடைபெறுகிறது.


இதன் கண்காட்சியை காந்தி கல்வி நிலைய இயக்குநர் திரு. அண்ணாமலை அவர்கள் 15-8-2009 அன்று தொடங்கி வைத்தார். இவ்வார விழாவை முன்னிட்டு திரு. ப. சரவணன் அவர்கள் அருட்பா மருட்பா பற்றிய ஒரு சொற்பொழிவாற்றினார். அதில் முக்கிய செய்தியாக வள்ளலாருக்கும், ஆறுமுக நாவலருக்கும் இடையே நடைபெற்ற கருத்து வேறுபாடுகள் பற்றியும், அருட்பா மருட்பு பற்றிய தன்னுடைய ஆய்வின் மூலம் அறிந்த செய்திகளையும் பகிர்ந்து கொண்டார்.