ரபேல் போர் விமானங்கள்

இந்தியாவின் கேம் சேஞ்சராக கருதப்படும் ரபேல் போர் விமானங்கள் (29.07.2020) அன்று இந்தியா வந்தடைந்தன.

பிரான்ஸிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை பெறுவதற்கான ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கையெழுத்தானது. முதற்கட்டமாக 5 விமானங்கள் திங்கட்கிழமை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஐந்து விமானங்களும் ஐக்கிய அரபு அமீரகம் வழியாக இந்தியா புறப்பட்டன. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அரபிக் கடலில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் கொல்கத்தா போர்க்கப்பலுடன் விமானங்களின் தொடர்பு இணைக்கப்பட்டது.

சுகாய் விமானங்கள் புடைசூழ இந்திய வான் எல்லையில் ரஃபேல் விமானங்கள் சீறிப்பாய்ந்து வந்தன. ஐந்து விமானங்களும் அம்பாலா விமானப்படை தளத்தில் தரை இறங்கின. இதற்கு  வாழ்த்து தெரிவித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது டுவிட்டரில் இந்திய ராணுவத்தின் புது சகாப்தம் தொடங்கியுள்ளது என கூறி பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’’ பறவைகள் (ரபேல் விமானங்கள்) பத்திரமாக அம்பாலாவில் தரையிறங்கிவிட்டன. ரபேல் விமானங்களின் வருகை இந்தியாவின் ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தத்தை தொடங்கிவைத்துள்ளது.
அம்பாலா விமானப்படை தளத்தில் தரை இறங்கிய ரஃபேல் விமானங்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.  ரபேல் விமானங்கள் தரை இறங்கிய உள்ளூர் மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். 

இந்திய விமானப்படையின் இந்த புதிய திறனைப்பற்றி யாராவது கவலையோ அல்லது விமர்சமங்களோ வைத்தால் அவர்கள் நமது பிராந்திய ஒருமைப்பாட்டை அச்சுறுத்த விரும்புவவர்களாகத்தான் இருக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

"https://ta.wikinews.org/w/index.php?title=ரபேல்_போர்_விமானங்கள்&oldid=52731" இலிருந்து மீள்விக்கப்பட்டது