முன்னாள் சப்பானியப் பிரதமர் சின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார்

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

வார்ப்புரு:சப்பான்வெள்ளி, சூலை 8, 2022

சப்பானின் முன்னாள் பிரதமராகப் பதவி வகித்த சின்சோ அபே இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். சப்பானின் நாரா நகரிலமைந்துள்ள யமாடோ-சாய்தாய்சி தொடருந்து நிலையத்துக்கண்மையில் உரையாற்றிக்கொன்டிருந்த வேளையில் துப்பாக்கிதாரியொருவரின் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். இறக்கும்போது இவருக்கு வயது 67. சப்பானின் மேலவைக்கான தேர்தல் வரும் சூலை 10, 2022 அன்று நடத்தப்படவுள்ள நிலையில், சப்பானின் தாராளமய மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளரான கெய் சாதோவை ஆதரித்து உரையாற்ரிக்கொண்டிருந்த வேளையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக நாரா நகரைச் சேர்ந்த தெத்சுயா யாமகாமி எனும் 42 வயதுடைய நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில் உலங்கு வானூர்தி மூலமாக மருத்துமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட போதும் அம்முயற்சி பலனளிக்கவில்லை.

சப்பானில் 1930களில் இரண்டாம் உலகப்போருக்கு முன்பு நிலவிய ஆயுதக்கலாச்சாரக் காலப்பகுதிக்குப் பின்பு, கொலைசெய்யப்பட்ட முதலாவது முன்னாள் அல்லது பதவியிலிருக்கும் பிரதமர் சின்சோ அபேயாவார்.

சின்சோ அபே சப்பானில் நீண்டகாலம் பதவிவகித்த பிரதமர் எனும் பெருமைக்குரியவராவார்.

மூலங்கள்

தொகு