முந்நீர் விழவு: நீர் குறித்த பண்பாட்டு அரசியல் கருத்தரங்கம்

ஞாயிறு, சனவரி 20, 2013

பூவுலகின் நண்பர்கள் மற்றும் என்விரோ கிளப், லயோலா கல்லூரி ஒருங்கிணைக்கும் முந்நீர் விழவு என்னும் நீர் குறித்த பண்பாட்டு அரசியல் கருத்தரங்கம் ஜனவரி 26, சனிக்கிழமை, அன்று காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை லாரன்ஸ் சுந்தரம் அரங்கம், இலயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம், சென்னையில் நிகழ உள்ளது.


வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கவும் அருட்தந்தை முனைவர். ஆல்பர்ட் வில்லியம், செயலாளர், இலயோலா கல்லூரி முன்னிலை வகிக்கவும் இந்தியப் பொதுவுடைமை கட்சியைச் சார்ந்த இரா. நல்லக்கண்ணு சிறப்புரையாற்றவும் கு. வி. கிருஷ்ணமூர்த்தி முந்நீர் விழவு குறித்து அறிமுகம் செய்யவும் உள்ளனர். நிகழ்வில் சுற்றுச்சூழல் குறித்த நூல்கள் வெளியிடப்பெற உள்ளன. இரண்டாம் நாள் நிகழ்வில், பேராசிரியர். லால் மோகன், முனைவர் தீபச் சாமுவேல், ஒரிசா பாலு, பேராசிரியர். ஜனகராஜன், பாமயன், கி. வரதராஜன், திருவாரூர், அரச்சலூர் செல்வம், பொறிஞர் இளங்கோவன், பொறிஞர் சா. காந்தி, வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், எம். ஆர். பிரபாகரன் ஆகியோர் கருத்துரை வழங்கவும் உள்ளனர்.


நிகழ்வில் பொது மக்கள் விவாத அரங்கு, மக்கள் நீர்க் கொள்கை வரைவு உருவாக்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இந்நிகழ்வில் கலைநிகழ்ச்சிகள், பாரம்பரியச் சிறு தானிய உணவு விருந்தோடு புத்தகச்சந்தையு இயற்கை உணவுப்பொருள் காட்சியும் முந்நீர் குறித்த ஒளிப்படக் கண்காட்சியும் நிகழ உள்ளன.