முத்தரையர் நாட்டு வேட அடியார்கள் கண்டெடுத்த திருவப்பூர் முத்துமாரி அம்மன் தல வரலாறு

முத்துமாரி அம்மன் தல வரலாறு தொகு

அன்னை முத்துமாரி இப்புண்ணிய பூமியில் தோன்றியப் பக்தர்களுக்கு அருள்பாலிக்க விரும்பினார். தக்கதொரு பக்தன் மூலம் வெளிவரக்காத்திருந்தார். இந்நிலையில் முத்தரையர் நாட்டு வேட அடியார்கள் இன்றைய திருக்கோகர்ணம் கோயிலுக்கு வடபுறத்தில் வாழ்ந்து வந்தனர் இவர்கள். கண்ணப்பர் குலத்தை சேர்ந்தவர்கள். கண்ணப்பர் வேட்டையாடி உணவு தேடும் பழக்கமும், வேட்டைப்பொருட்களை ஆண்டவனுக்கு படையலிட்டு மகிழும் குணமும், உடையவராய் பக்தி மார்க்கத்தில் திளைத்தவர். தினம் தினம் தான் வேட்டையாடி கொணர்ந்த மாமிசத்தை சுட்டுப் படையலிட்டு மகிழ்ந்தார். ஆண்டவனும் வனவாசியான வேடன் கண்ணப்பரின் அன்புப்படையலை ஏற்றுக்கொண்டார்.

சோதித்த ஆண்டவன் தொகு

ஒருநாள் தனது பாசமிகு பக்தனை சோதித்து புடம்போட ஆண்டவன் எண்ணினார். வேடன் கண்ணப்பர் தன்னை நாடிவரும் சமயம் தனது ஒரு கண்ணில் ரத்தம் வருமாறு செய்தார். பக்தர் கண்ணப்பர், இதனைக்கண்டு பதறினார். செய்வதறியாது, தனது கண்ணைத் தனது அம்பாலேயே தோண்டி எடுத்தார். இருகண்களும் எடுத்த நிலையில் ஆண்டவனின் கண்ணைப் பார்த்தால் மூடி ஒட்ட வைத்தார். இத்தகைய பாசமிகு பக்தன் கண்ணப்பரின் கருணையை மெச்சி கண்ணப்பரை கண்ணப்ப நாயனராக ஏற்று முக்தியளித்தார்.

அன்னையின் திருவிளையாடலின் தொகு

அன்னையின் திருவிளையாடலின் படி முத்தரைய வேட அடியார்களாகிய கருப்பன், சுப்பன், காத்தமுத்து ஆகியோர் முன் உடும்பு உருவத்தில் காணப்பட்டார். தக்கதொரு வேட்டைப்பொருள் வாய்த்தது எனக்கருதி வேட அடியார்கள் உடும்பைப் பிடிக்க முயன்றனர். மறைந்து மறைந்து உடும்பு ஓட வேட அடியார்களும் பின்தொடர்ந்து ஓடினர். தொடர்ந்து ஓடிய உடும்பு அடர்ந்த காடுகளில் வெகுதூரம் ஓடி, வேடர்களின் கண்ணுக்கு தெரிந்த நிலையில் ஒரு பொந்துக்குள் புகுந்தது. அன்னை புண்ணிய பூமியில் தோன்றக் காத்திருந்து இடத்திலேயே அந்தப்பொந்து இருந்தது. இந்த இடம் அக்காலத்தில் காளிக்கோட்டை என்ற பெயரில் வழங்கி வந்தது. இந்த இடத்திலிருந்து கோட்டைப் பிற்காலத்தில் தொண்டைமான்களின் போரின்போது இடித்து அழிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. கவினாட்டு கண்மாயில் நடைபெற்ற பல போர்களை வரலாறு தெரிவிக்கிறது. இன்றும் முத்தரையர் நாட்டு வேட அடியார் குலத்தவர் தான் வணங்கும் தெய்வங்களுக்கு சூட்டாங் கறி படைத்து மகிழ்வித்தும், பிற இனத்தவர்கள் கொண்டுவரும் காணிக்கைப் பொருள்களை ஆண்டவனுக்கு தாங்களே படைப்பம் படைப்புப் பொருள்களை தாங்களே புசிப்பதுமான வழக்கம். இத்தகைய படையல் பொருள்கைள வேறு இனத்தவர் எவருமே புசிப்பதில்லை. உண்பதுமில்லை, மாறாக மாற்று இனத்தவர் தெய்வங்களை வணங்கி, அருள்பெற்று முத்தரைய நாட்டு வேடர் பூசாரிகளிடம் தீர்த்தம், திருநீர், பிரசாதங்களைப் பெற்று செல்கின்றனர். வேறு படைப்புப் பொருள்களை பெற பிற இனத்தவர்கள் ஆசைப்படுவது இல்லை. மழை, நாட்டு நலம், மக்களின் நல்வாழ்வு வேண்டியும் நாட்டு வேட்டை எனும் பாரிவேட்டை என்றும் குறிப்பிட்ட காலங்களில் வேட்டையாடி தெய்வத்திற்கு படைத்து தெய்வங்களை மகிழ்வித்து வருகின்றனர். வேட்டையின்போது ஒன்றும் கிடைக்காத நிலையில் தெய்வபக்தி காரணமாக மனம் நோகாது வேட்டைக்கருவிகளை கழுவிப்படைத்து மகிழ்கின்றனர். இத்தகைய பக்திமிகு முத்தரையர் நாட்டு வேட அடியார்கள் கைப்பட்ட அன்னை முத்துமாரியம்மன் அருள்வாக்காக அடியார்மேல் அருள்வந்து தக்கதொரு இடத்தில் தன்னை அமர்த்திப் பூசித்து வரும்படி கூறினார். அருள்வாக்குப்படி அன்னையின் திருவுருவச்சிலையை தங்களது இருப்பிடப்பகுதி நோக்கி சுமந்து வந்தனர். அன்னைக்குப் பிடித்தமான இடம் வந்தபோது இறக்கி வைக்க நேர்ந்தது. இந்த இடமே தனக்கு உகந்தது என அன்னை தெரிவித்தார். அந்த இடம்தான் இன்று அன்னை எழுந்தருளியுள்ள திருவப்பூர் ஆகும். இந்நிகழ்ச்சி கிபி 1732 ஆண்டுக்கு முன்னதாக நடைபெற்றதாகும். கண்கண்ட தெய்வமாம் அன்னை முத்துமாரியை தக்கதொரு கட்டிடத்தில் அமர்த்த இயலாத நிலை வேட அடியார்களோ அன்றைய பசியை போக்க காடு, மேடு அலைந்து காய், கனிகளையும் இலை, கிழங்குகளையும், வேட்டைப்பொருள்கள் மூலமாக உணவு தேட வேண்டிய நிலை. இந்நிலையில் கட்டிடம் கட்ட பொன், பொருளேது. பக்தர் நிலையறிந்து அன்னையவள் பச்சை இலைக்கூடாரம் அமைத்து பராமரிக்க கூறினார்.[1]

மூலம் தொகு


 
  1. முத்தரையர் நாட்டு வேட அடியார்கள்