முடிகண்டநல்லூர் வரலாறு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள முடிகண்டநல்லூர் கிராமம், வீரநாராயண பெருமாள்புரம் என்றழைக்கப்பட்ட முதலாம் பராந்தக மன்னனர் காலத்தில்காட்டுமன்னார்கோயில் தலை நகராக கொண்டு 161 கிராமங்கள் இயங்கின, அதில் முடிகண்டநல்லூறூம் ஒன்று. “முதலாம் இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவரான. சோழ மரபினரின் பொற்காலம் என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம்இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை முதலாம் பராந்தக சோழன் இறந்ததற்கும் முதலாம் இராஜராஜ சோழன் அரியணை ஏறுவதற்கும் இடையேயுள்ள காலப்பகுதி முப்பது ஆண்டுகளைக் கொண்ட குறுகிய காலப்பகுதியாகும். ஆயினும் அது சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதியாகும். அப்பகுதிக்கான ஆதாரங்கள் குழப்பமாகவே உள்ளன. முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆட்சியில் சோழநாடு வடக்கே நெல்லூர் வரையில் பரவியிருந்தது இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான் கொல்லம். கொல்ல தேசம்.கொடுங்கோளூர் ஆகிய நாட்டு மன்னர்களை வெற்றி கொண்டார். முடிகண்டநல்லூர் என்னும் ஊரில் நடைபெற்ற போரில் வெற்றி கொண்ட பகுதியை முடிகண்டநல்லூர் என்னும் பெயரில் ஒரு கிராமதை உருவாக்கினார். அப்பொழுது இராசராச சோழனுக்கு முடிகொண்டான் என பெயர் சூட்டப்பட்டது இந்த ஊரில்தான் முதல் (மடம்) சத்திரம் உருவாக்கப்பட்டது. இந்த ஊரில் குண்டபண்டிதர் ஓடை மற்றும் பெரிய ஏரி. சித்தேரி. தாமரை குளம்(சாவடிக்குளம்) மற்றும் மூர்த்திவினாயகர் குளம். திருகுளம் போன்ற பல நீர் நிலைகளை உருவானது இந்த கிராமத்தில்.