மிசிசிப்பியில் சூறாவளி தாக்கியதில் 10 பேர் உயிரிழப்பு

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

ஞாயிறு, ஏப்பிரல் 25, 2010


ஐக்கிய அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தில் சூறாவளி தாக்கியதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர்.


யாசூ நகரில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக மிசிசிப்பி ஆளுநர் ஹேலி பார்பர் தெரிவித்தார். 17 நகரங்களில் அவர் அவசரகால நிலையைப் பிறப்பித்துள்ளார்.


யாசூ நகரில் தேவாலயம் ஒன்று தரைமட்டமாகியுள்ளது. பல வீடுகள் சேதமடைந்துள்ளன.


அருகில் உள்ள லூசியானா, அர்க்கன்சஸ், அலபாமா மாநிலங்களையும் சூறவளை தாக்கியுள்ளது. சூறாவளி இப்போது கிழக்கு நோக்கி நகர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மிசிசிப்பியின் நடுப் பகுதியில் 1.6 கிமீ அகல சூறாவளி தாக்கியது. மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல சாலைகள் வீழ்ந்த மரங்களினால் மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் பெரு மழை பெய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்

தொகு