மலாவியில் மனித தோற்றம் இடம் பெற்றுள்ளமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

(மலாவியில் மனித தோற்றம் இடம் பெற்றுள்ளதா? இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஞாயிறு, அக்டோபர் 25, 2009

மலாவி


தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் மனித இனம் தோற்றம் பெற்றிருக்காலம் என்னும் சந்தேகங்கள் எழுப்பக்கூடிய சில சுவட்டு ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.


மலாவியில் அண்மையில் அகழ்வாராட்சிக்கு உட்படத்தப்பட்ட பகுதி ஒன்றில் இருந்து புராதன ஆயுதங்கள் மற்றும் எச்சங்கள் ஆதாரமாகக் கொண்டு இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மலாவியின் வட நகரான கரோங்காவின் பின்தங்கிய இடம் ஒன்றில் மானிடவியல் அகழ்வு இடம் பெற்றுள்ளது. செருமனியின் பிராங்க்ஃபுர்ட்டின் கோத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரீட்மன் சிரெங்க் என்பவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.


இக்கண்டுபிடிப்பு தற்போது உள்ள ஆப்பிரிக்காவின் ”பெரும் றிவ்ட் பள்ளத்தாக்கு” (Great Rift Valley), மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகள் மனித இனம் தோன்றியதற்கான இடம் என்னும் கொள்கையை வலுப்படுத்துவதாகவும் அத்துடன் இப்பரப்பில் மலாவியை இனி இணைக்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்தியுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இப்பகுதியில் டைனோசர்கள் போன்ற 100 தொடக்கம் 140 மில்லியன் ஆண்டுகள் வரை வாழ்ந்த அங்கிகளின் எச்சங்களை கொண்டு இருந்துள்ளதாகவும் அதேபோல் 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித மற்றும் மரவாழ் மூதாதைகளையும் கொண்டிருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


ஏற்கனவே தன்சானியாவில் மனித முதாதைகள் தோன்றியுள்ளது என்னும் கருத்தும் அதற்கான ஆதாரங்களும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுக் கொண்டுள்ள நிலையில் தன்சானியா எல்லையில் உள்ள இந்த மலாவியில் அதேவகையிலான அகழ்வின் மூலம் மனித மூதாதை எச்சங்கள் வாழிட சுவடுகள் கண்டிறியப்பட்டுள்ளதை மனித இனம் தோன்றியது பற்றிய பல வினாக்களுக்கு விடைதரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


கரோங்கா நகரம் மலாவியின் தலைநகர் லிலொங்குவேயில் இருந்து 615 கிமீ (380 மைல்கள்) வடக்கே, தன்சானியாவின் எல்லைக்கருகே அமைந்துள்ளது.

மூலம்