போர்க் குற்றங்களுக்காக லைபீரியாவின் முன்னாள் அதிபர் மீது விசாரணைகள் ஆரம்பம்
செவ்வாய், சூலை 14, 2009 த ஹேக், நெதர்லாந்து
தனது அண்டை நாடான சியேரா லியோனியில் 1991-2001 காலப்பகுதியில் இடம்பெற்ற உள்நாட்டுப்போரில் போர்க்குற்றங்கள் புரிந்த குற்றச்சாட்டின் பேரில் லைபீரியாவின் முன்னாள் அதிபர் சார்ல்ஸ் டெய்லர் த ஹேக்கில் உள்ள போர் குற்ற விசாரணை மன்றத்தில் முதன் முதலாக விசாரணைக்குட்படுத்தப்பட்டார். டெய்லர் தனக்கு எதிராகக் கூறப்பட்ட போர்க் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று கூறி அவற்றை நிராகரித்தார்.
கொலை, பாலியல் வல்லுறவு மற்றும் பயங்கரவாதம் உட்பட அண்டை நாடான சியாரோலியோனின் உள்நாட்டுப் போருடன் சம்பந்தப்பட்ட தனக்கெதிரான 11 குற்றச்சாட்டுக்களை சார்ள்ஸ் டெய்லர் மறுத்துள்ளார்.
போர் குற்றம் குறித்த விசாரணைகளில் கலந்துகொள்ளும் முதலாவது ஆப்பிரிக்கத் தலைவர் இவராவார்.
சியேராலியோனில் உள்ள வைரங்கள் மூலமான சொத்துக்களை அபகரிப்பதற்காக, டெய்லர் ஆயுதங்களைத் தரித்த கிளர்ச்சிக்குழுவை வழி நடத்தினார் என்ற சட்டவாதிகள் அவர் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.
தனது நடத்தை பற்றி தவறு கற்பிக்கப்பட்டிருப்பதாகவும், தான் சியாரோலியோனில் அமைதியை ஏற்படுத்த மாத்திரமே விளைந்ததாகவும் சார்ல்ஸ் டெய்லர் கூறினார்.