போயிங் தனது முதலாவது 787 டிரீம்லைனர் விமானத்தை விநியோகிக்கிறது

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

திங்கள், செப்டெம்பர் 26, 2011

அமெரிக்காவின் விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங் தனது முதலாவது 787 டிரீம்லைனர் விமானத்தை சப்பானின் நிப்போன் ஏர்வேய்ஸ் நிறுவனத்திடம் மூன்றாண்டுகள் கால தாமதத்தின் பின்னர் இன்று கையளிக்கவிருக்கிறது.


போயிங் 787 டிரீம்லைனர்

டிரீம்லைனர் விமானம் 2008 ஆம் ஆண்டில் சப்பானிடம் கையளிக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் சில தொழில்நுட்பக் கோளாறுகள் இதனைத் தாமதப்படுத்தியிருந்தன. கடந்த சனவரியில் இடம்பெற்ற ஒரு சோதனைப் பறப்பின் போது விமானத்தில் தீ பரவியதாக அறிவிக்கப்பட்டது.


787 டிரீம்லைனரின் சிறப்பு குறைவான எடையாகும். இதனால் இது குறைவான எரிபொருளையே செலவழிக்கும். இதன் காரணமாக இது நீண்ட தூரம் எரிபொருள் நிரப்பாமல் பறக்க முடியும். தற்போதுள்ள விமானங்களை விட 20 விழுக்காடு எரிபொருளைக் குறைவாகவே டிரீம்லைனர் பயன்படுத்தும்.


2013 ஆம் ஆண்டில் இருந்து மாதத்துக்கு 10 விமானங்களைத் தயாரிக்க போயிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது 821 விமானங்களுக்கு உலகின் பல்வேறு விமான நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளன. ஆகக்கூடியது 290 பயணிகளை இது ஏற்றிச் செல்லும். போயிங் 747 ஜம்போ ஜெட் விமானத்தை விட 787 சிறியதாகும்.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு