பேச்சு:டைட்டானிக் கப்பல் மூழ்கிய 100வது ஆண்டு நிறைவு நினைவு கூரப்பட்டது

நினைவு கூரப்பட்டது அல்ல.கூறப்பட்டது. மற்றபடி செய்தி நல்ல முறையில் உள்ளது.−முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து 117.206.81.193 (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனரால் பதியப்பட்டது. .

நினைவுகூரல் சரியென்றே நினைக்கிறேன். உங்கள் கருத்துக்கு நன்றி.--Kanags \பேச்சு 21:57, 15 ஏப்ரல் 2012 (UTC)
கூர்தல் நினைவு கொள்ளுதல் ..கூறல் சொல்வது.--Kanags \பேச்சு 22:05, 15 ஏப்ரல் 2012 (UTC)
நினைவு கூறப்பட்டது என்பது தவறு. இக் கூற்று என்ன பொருள் தரவல்லது? நினைவு சொல்லப்பட்டது என்றால் எப்படிப் பொருள் தராதோ அதே போல நினைவு கூறப்பட்டது என்றாலும் அது பொருள் தராத ஒரு கூற்று. கூர் என்பது பெரும்பாலும் நினைவு கூர்தல் என்னும் சூழலில் பயன்படும் சொல். கூர்ந்தார் என்பது போல் வினைசொல்லாகவும் பயன்படும் சொல். கூர் என்பது பெயர்ச்சொல்லாகவும் பயன்படும். கழக அகராதி கூர்தல் என்பதற்கு "ஆராய்தல், கூருதல், நுணுகுதல், மிகுதல், விரும்புதல், வளைதல், ஒடுங்குதல்" என்கிறது. இங்கே நினைவு கூர்தல் என்பது நினைவுக்கு (துல்லியமாகக்) கொண்டு வருதல் என்று பொருள். தீர் என்னும் சொல் தீர்தல் தீருதல் என்னும் வடிவுகள் கொள்ளுதல்போல், கூர்தல், கூருதல் என்றும் ஆகும். சேரல், தீரல், என்பன போல் கூரல் என்னும் சொல் வடிவமும் கொள்ளும் என்றே நினைக்கின்றேன். கூரப்பட்டது என்பது சரி. சேர் சேர்கின்றார் என்பது போல கூர் கூர்கின்றார் என்று வரும். சேர்-சேரினார் என்று வராது சேர்ந்தார் என்று வரும், அது போலவே கூர்ந்தார் என்று வரும், (நினைவு) கூரினார், கூராது போனார் என்றும் வரும் என்று தோன்றினாலும், சிறு ஐயப்பாடு உள்ளது. கூருதல் என்னும் வடிவும் கொடுக்கப்பட்டுள்ளதால், கூரினார், கூராது போனார் என்பன சரியான வடிவங்களாக இருக்கும் வாய்ப்பு உண்டு. தலைப்பு, டைட்டானிக்குக் கப்பல் மூழ்கிய 100-ஆவது ஆண்டை நினைவு கூர்ந்தனர் என்று இருந்தால் எப்பிழையும் கட்டாயம் இல்லை (தைட்டானிக்கு என்றும் எழுதலாம்). --செல்வா (பேச்சு) 00:11, 16 ஏப்ரல் 2012 (UTC)
செல்வா, இந்தச் சந்தேகம் எனக்கு நீண்ட காலமாக இருந்து வந்தது. உங்கள் விரிவான விளக்கத்தை அடுத்து எனது சந்தேகம் தீர்ந்தது. கூகுளில் பார்த்தால் நினைவு கூறுதல் என்பது பெரும்பாலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழகத்தவரே அதிகம் எழுதுகின்றனர். பல தமிழறிஞர்களும் அவ்வாறே எழுதியிருக்கின்றனர். மேலும், டைட்டானிக்குக் கப்பல் மூழ்கிய 100-ஆவது ஆண்டை நினைவு கூர்ந்தனர் எனத் தலைப்பிடலாம். ஆனால் யார் நினைவு கூர்ந்தார்கள் என்று கேள்வி எழுகிறது. எனவே இன்னும் விரிவாகத் தலைப்பில் எழுத வேண்டி வரும். எனவே தலைப்பை மாற்றாமலே விடுகிறேன்.--Kanags \பேச்சு 02:36, 16 ஏப்ரல் 2012 (UTC)
நினைவு கூரப்பட்டது என்றாலும், யாரால் நினைவு கூரப்பட்டது என்னும் கேள்வி எழும் அல்லவா? எனவே அது மறுப்பாக அமையாது. பொதுவாக செயப்பாட்டு வினைவடிவில் எழுதுவதைவிட நேரடியாகச் சொல்வது நல்லது. தலைப்பை மாற்ற வேண்டாம், ஒரு கருத்துக்காகக் கூறினேன். --செல்வா (பேச்சு) 13:39, 16 ஏப்ரல் 2012 (UTC)

Start a discussion about டைட்டானிக் கப்பல் மூழ்கிய 100வது ஆண்டு நிறைவு நினைவு கூரப்பட்டது

Start a discussion
Return to "டைட்டானிக் கப்பல் மூழ்கிய 100வது ஆண்டு நிறைவு நினைவு கூரப்பட்டது" page.