பேச்சு:டிசம்பர் இசை விழா 2013: சென்னையின் இசை மன்றங்கள் தயாராகி வருகின்றன
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Kanags
சென்னையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் நடக்கும் கருநாடக இசை விழா (சில பரத நாட்டிய நிகழ்ச்சிகளும்) குறித்து இன்னமும் பெரிய அளவில் செய்தித்தாள்களில் தகவல்கள் வெளிவர ஆரம்பிக்கவில்லை. இசையின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக இந்த செய்திக் கட்டுரையை நான் எழுதினேன். எனவே செய்தி நிறுவனங்களின் இணையத்தளப் பக்கங்களை மூலங்களாக இங்கு காட்ட இயலவில்லை; கலை மன்றங்களின் இணையத்தளப் பக்கங்களை மூலங்களாக சுட்டியுள்ளேன்! கட்டுரையை மிகைப்படுத்தலின்றி எழுதியுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:45, 25 நவம்பர் 2013 (UTC)
- சொந்தமாக சேகரித்த செய்திகளையும் எழுதலாம். இவ்வகையான செய்திகள் ஆங்கில விக்கிசெய்தியில் Original Reporting என்ற வகைக்குள் அடக்குகிறார்கள். நாமும் அவ்வாறு ஆரம்பிக்கலாம். Original Reporting என்பதற்கு நல்ல தமிழ்ச் சொற்றொடர் ஒன்றைப் பரிந்துரையுங்கள்.--Kanags \பேச்சு 10:24, 25 நவம்பர் 2013 (UTC)