பேச்சு:கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் விக்கிப்பீடியா பயிலரங்கம்


கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் விக்கிப்பீடியா பயிலரங்கம் இதழியல் துறையில் பணிவாய்ப்பு குறித்தும், தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் குறித்தும் பயிலரங்கு, சென்ற வியாழக்கிழமை மார்ச் 14 இல் இல் கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இப்பயிலரங்கின் முதல் அமர்வில், பெரியார் பல்கலைக் கழக இதழியல் துறை பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதி, விக்கிப்பீடியாவின் தோற்றம் வளர்ச்சி , தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருள்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருள்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் ஆகிய பொருண்மைகளில் சிறப்புரையாற்றி , செய்முறைப் பயிற்சி அளித்தார். கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி மாணவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவை அறியவும், இதழியல் வரலாற்றையும், அதன் பயன்பாட்டையும் அறிய இந்நிகழ்வு உதவியாக இருந்தது. மிக்க நன்றி!

Start a discussion about கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் விக்கிப்பீடியா பயிலரங்கம்

Start a discussion
Return to "கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் விக்கிப்பீடியா பயிலரங்கம்" page.