பெரியார் பல்கலைக்கழகத்தில் மரபுக்கலை பற்றிய இரண்டு நாள் பயிலரங்கம்

செவ்வாய், சனவரி 1, 2013

சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று மரபுக்கலை பற்றிய இரண்டு நாள் பயிலரங்கம் தொடங்கியது.


இப்பயிலரங்கில், பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் கலை பண்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா. வீ. சிங்காரம் வரவேற்புரை நிகழ்த்தினார். பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கி. முத்து செழியன் பயிலரங்கை தொடங்கி வைத்து, தலைமையுரை நிகழ்த்தி மையத்தின் பணிகளை விளக்கி, எதிர்கால திட்டங்களை விளக்கினார். பெரியார் பல்கலைக்கழகஆட்சிக்குழு உறுப்பினர் பேரா. சிங்காரம் பழனியாண்டி நோக்கவுரை நிகழ்த்தினார். புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயிலரங்கை நடத்தினார். இந் நிகழ்வில் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பேரா. குணசேகரன், பேரா. மூர்த்தி, பேரா. இராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. நந்தகுமார் நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்வில் முனைவர் திருமூர்த்தி நிகழ்ச்சித் தொகுப்புரை வழங்கினார்.