பிணைக்கதியாக ஒன்பது மாத குழந்தை; இஸ்ரேலில் அவலம் !

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ்க்கு இடையே தொடங்கிய போர் 500 நாட்களை கடந்துவிட்டது. இந்தப் போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் ஒவ்வொரு வாரமும் மூன்று அல்லது நான்கு நபர்களாக விடுவித்து வந்தனர். இதற்கு பதிலீடாக, நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்து வந்தது. மொத்தமாக, இதுவரை 24 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் உயிருடன் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று நான்கு உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் நேற்று ஒப்படைத்தனர். இதில் கபிர் என்ற ஒன்பது 9 மாத குழந்தையும் அடக்கம். இந்த குழந்தைதான் பிடித்துச் செல்லப்பட்டவர்களில் மிகவும் இளம் வயதான பிணைக்கைதி என்றும், இந்த 4 பேரும் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில், பாதுகாவலர்களுடன் சேர்த்து கொல்லப்பட்டனர் என ஹமாஸ் தீவிரவாதிகள் கூறியுள்ளனர்.

மேலும், அவர்கள் கூறுகையில், சண்டை நிறுத்தத்தை நீட்டித்து, இஸ்ரேல் படையினரை வாபஸ் பெறவில்லை என்றால், மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க மாட்டோம் எனவும் ஹமாஸ் அமைப்பினர் கூறியுள்ளனர்.

முன்னதாக, ஹமாஸ் அமைப்பினர் 30 குழந்தைகள் உட்பட 250 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். சண்டை நிறுத்த ஒப்பந்தம் மற்றும் இதர ஒப்பந்தங்கள் மூலம் பாதிக்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் மீட்கப்பட்டனர். இஸ்ரேல் ராணுவத்தினரின் தேடுதல் வேட்டையில் 8 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டனர். தாக்குதலில் அல்லது பாதுகாப்பில் இருந்தபோது உயிரிழந்த பிணைக் கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

More news @ / https://athirvu.in