பல்கலை வித்தகர் திரு மீ. ப. சோமசுந்தரம் - பிறந்த தினம்

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

திரு மீ. ப. சோமசுந்தரம் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் 1921ம் வருடம் ஜூன் மாதம் 17ந்தேதி பிறந்தார்.

இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழில் வித்வான் பட்டம் பெற்றவர். அகில இந்திய வானொலியில் கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் பணியாற்றினார். பிரபல பத்திரிகையான கல்கி இதழின் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். நண்பன் என்ற மாத இதழையும் நடத்திவந்தார்.

சர்வதேச அமைப்புகளில் பங்காற்றி தமிழின் பெருமையை உலகறியச்செய்தவர். சிறுகதைகள், நாவல்கள், நாடகம், கவிதைகள், பயணம் மற்றும் இசை ஆய்வு கட்டுரை என இலக்கியத்தின் அணைத்து துறைகளிலும் தனது பங்களிப்பை கொடுத்து வந்தார்.

சாகித்ய அகாடமி விருது பெற்றவர். சித்தர் பாடல்கள் மற்றும் இசை போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் 1999ம் வருடம் ஜனவரி 15ந்தேதி காலமானார்.