பப்புவா நியூ கினியில் 7.3 அளவு நிலநடுக்கம்
வியாழன், திசம்பர் 15, 2011
- 9 ஏப்பிரல் 2015: உலகின் பெரிய எலி பப்புவா நியூகினியில் கண்டுபிடிப்பு
- 1 ஆகத்து 2013: ஆத்திரேலியா - பப்புவா நியூ கினி புதிய உடன்பாட்டின் படி 40 அகதிகள் மானுஸ் தீவை சென்றடைந்தனர்
- 19 சூலை 2013: படகு அகதிகள் ஆத்திரேலியாவில் இனித் தஞ்சம் கோர முடியாது, கெவின் ரட் திடீர் அறிவிப்பு
- 21 நவம்பர் 2012: முதல் தொகுதி அகதிகள் குழுவை ஆத்திரேலியா மானுஸ் தீவுக்கு அனுப்பியது
- 11 அக்டோபர் 2012: பப்புவா நியூ கினியில் அகதிகளுக்கான முகாம் அமைக்க ஆத்திரேலிய நாடாளுமன்றம் ஒப்புதல்
தெற்குப் பசிபிக் நாடான பப்புவா நியூ கினியின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் 7.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. து. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
பப்புவா நியூ கினியின் லாய் என்ற இரண்டாவது பெரிய நகரத்தில் இருந்து 89 கிமீ தூரத்தில் 121 கிமீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இதனால் பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 3 நிமிடங்கள் தொடர்ந்த நிலநடுக்கம் மிகவும் பெரிய அளவில் இருந்ததாகவும் சில கட்டடங்களின் சுவர்கள் மட்டும் லேசான பாதிப்படைந்ததாகவும், நிலநடுக்கத்தில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளிலிருந்து வீதிகளுக்கு ஓடிவந்ததாகவும் உள்ளூர்ச் செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் போர்ட் மோர்ஸ்பியை சேர்ந்த மக்களும், இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்
தொகு- 7.3 magnitude earthquake hits Papua New Guinea, telegraph, டிசம்பர் 14, 2011
- Papua New Guinea hit by 7.1 magnitude earthquake, bbc, டிசம்பர் 14 , 2011
- Magnitude 7.3 quake hits near Papua New Guinea: agency,nz.news.yahoo, டிசம்பர் 14, 2011
- 7.3 quake hits near Papua New Guinea: Agency, dnaindia, டிசம்பர் 14 , 2011
- rocks PNG, no damage reported,ninemsn, டிசம்பர் 14, 2011
- பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம், தினமலர், டிசம்பர் 14, 2011
- பப்புவா நியூ கினியாவில் 7.3 ரிக்டர் நிலநடுக்கம்- உயிரிழப்பு இல்லை, ஒன்இந்தியா, டிசம்பர் 14, 2011
- பபுவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்,தினகரன், டிசம்பர் 14, 2011