பப்புவா நியூ கினியில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு, விமானி தப்பினார்

வியாழன், திசம்பர் 31, 2009

பப்புவா நியூ கினியில் இலகு விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் 6 பேர் கொல்லப்பட்டனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அதன் விமானி ரிச்சார்ட் லியாகி கடும் காயங்களுடன் உயிர் தப்பினார்.


பப்ப்புவா நியூ கினியின் வடமேற்குக் கரையில் மரோபி மாகாணத்தின் மலைப்பகுதியில் நேற்றுப் பறந்து கொண்டிருக்கையில் விமானத்தின் இயந்திரப் பகுதியில் தீப்பிடித்துத் தரையில் மோதியது.


உயிர் தப்பிய விமானி (அகவை 68) ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் மருத்துவமனையில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார். 47 வீதமான அவரது உடல் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளது என அவரது தந்தை நிக்கலாஸ் லியாகி தெரிவித்தார்.


கொல்லப்பட்ட அனைத்துப் பயணிகளும் பாப்புவா நியூ கினியைச் சேர்ந்தவர்கள். நான்கு பெரிவர்களும், இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.


விபத்து நடந்த இடத்தை அடைந்த மரோபி மாகான காவல்துறை உயரதிகாரி கமாண்டர் பீட்டர் கின்னஸ், "விமானம் முற்றாகச் சேதமடைந்துள்ளது, எதுவும் செய்வதற்கில்லை," எனத் தெரிவித்ததாஅக உள்ளூர் தேசியத் தினசரி அறிவித்துள்ளது.


பப்புவா நியூ கினியில் கோக்கோடா என்ற இடத்தில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற வேறொரு விமானவிபத்தில் 9 ஆஸ்திரேலிய உல்லாசப் பயணிகள் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.

மூலம் தொகு