பக்காவா பிளான் போட்டு பொலார்டை காலி செய்த தல தோனி…!

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

தோனியை விட ஸ்டீவ் ஸ்மித் தான் அறிவாளி என்று பேசிய புனே அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிற்கு தோனி சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

ஐ.பி.எல் பத்தாவது சீசனின் இறுதி போட்டியில் புனே அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்து வருகின்றன.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மும்பை அணிக்கு அந்த அணியின் முதல் நான்கு வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை  இழந்து  வெளியேறினர்.

அடுத்ததாக களமிறங்கிய அதிரடி வீரர் பொலார்டு எதிர்கொண்ட முதல் பந்தை இமாலய சிக்ஸர் பறக்கவிட்டார், அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார், அதற்கடுதத்தாக புனே கேப்டன் ஸ்மித்தை செய்கையால் அழைத்த தோனி பீல்டர் ஒருவரை லாங்க் ஆஃப் திசையில் நிற்க வைக்குமாறு அறிவுறுத்தினார், தோனியின் வகுத்த வியூகத்தின் படியே பொலார்டு மிட் லாங்க் ஆஃப் திசையில் நிற்கவைக்கப்பட்ட மனோஜ் திவாரியிடம் கேட்ச் கொடுத்து மூன்றாவது பந்திலேயே வெளியேறினார்.

வீடியோ;

இதற்கு முன்னதாக கடந்த 7 வருடங்களுக்கு முன்பும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடிய போதும் இதே போல் பொலார்ட்டை வெளியேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.