நியண்டர்தால் மனிதன் சமைத்த தாவர உணவை உண்டதாகப் புதிய ஆய்வுகள் தெரிவிப்பு

This is the stable version, checked on 20 சனவரி 2011. Template changes await review.

புதன், திசம்பர் 29, 2010

நியண்டர்தால் மனிதர்கள் சமைத்த தாவர உணவை உண்டதாக அவர்களின் எச்சங்களை ஆராய்ந்த வரலாற்றாளர்கள் தெரிவித்துள்ளனர்.


நியண்டர்தால் மனிதன்

ஐக்கிய அமெரிக்காவின் ஆய்வாளர்கள் நியண்டர்தால் மனிதனின் பற்களில் சமைத்த தாவர உணவு மீதிகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். முன்னர் நடத்தப்பட்ட ஆய்வுகள் நியண்டர்தால் மனிதர் மாமிச உணவை மட்டுமே உண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த மனிதர்களின் எலும்புகள் மீது நடத்தப்பட்ட வேதியியல் ஆய்வுகளின் படியே இம்முடிவுகளை முன்னர் எடுத்திருந்தனர். பனி யுகத்தின் போது பெரும் மிருகங்கள் அழிந்தமையே இம்மனிதர்களின் அழிவுக்கும் காரணம் என சிலரால் காரணம் கூறப்பட்டது.


புரோசிடிங்சு ஆஃவ் த நேசனல் அக்காடமி ஆஃவ் சயன்சு என்ற அறிவியல் இதழில் நியண்டர்தால் மனிதர் பற்றிய புதிய ஆய்வு குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது.


நியண்டர்தால் (Neanderthal) மனிதர் ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்திருந்த ஹோமோ வகை இனமாகும். 24, 000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் இவ்வினம் அழிந்துபோனது. நியண்டர்தால் மனித எச்சங்கள் செருமனியின் நியண்டர்தால் என்னும் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறான். இவன் நெருப்பை பயன்படுத்தியதாகவும், குகைகளில் வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.


மூலம்