தெற்கு சூடானின் அரசுத்தலைவராக சல்வா கீர் பதவியேற்றார்

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

வெள்ளி, மே 21, 2010

சூடானின் பகுதி-சுயாதீனப் பிராந்தியமான தெற்கு சூடானின் முதலாவது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத்தலைவராக முன்னாள் போராளிக் குழுவான சூடான் பக்கள் விடுதலை இயக்கத்தின் (Sudan People's Liberation Army/Movement) தலைவர் சல்வா கீர் இன்று பதவியேற்றார்.


சல்வார் கீர்

வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் இடம்பெற்ற 21 ஆண்டுகால உள்நாட்டுப் போர் 2005 ஆம் ஆண்டில் முடிவடையக் காரணமான அமைதி ஒப்பந்தத்தை அடுத்து கடந்த ஏப்ரலில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் சல்வார் கீர் பெரும் வெற்றி பெற்றிருந்தார்.


தெற்கு சூடான் விடுதலை பெறுவதற்கான பொது வாக்கெடுப்பு அடுத்த ஆண்டு இடம்பெற விருக்கிறது. இத்தேர்தலில் விடுதலைக்கு சார்பாக அனைத்து மக்களும் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


சூடானின் முக்கியமான எண்ணெய் வளம் தெற்குப் பகுதியிலேயே காணப்படுகின்றன. வடக்குடனான எல்லை இன்னமும் வரையறுக்கப்படவில்லை.

மூலம்

தொகு