தென் கொரியா 'அறிவியல்' திமிங்கல வேட்டையை முன்மொழிவு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வியாழன், சூலை 5, 2012

சப்பானியத் திட்டத்தினை எதிரொலிப்பதாய் அறிவியல் ஆராய்ச்சிக்கான திமிங்கல வேட்டை எனப்படும் சட்டபூர்வ அனுமதியுடன் திமிங்கலங்களை வேட்டையாடுவதாய் தென் கொரியா முன்மொழிந்துள்ளது.


மிங்கி திமிங்கிலம்

இவ்வேட்டையானது கொரியப் பெருங்கடலில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. எத்தனை திமிங்கிலங்கள் இவ்வாறு வேட்டையாடப்படும் என அது அறிவிக்கவில்லை.


"மிங்க்கி திமிங்கிலங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கு இந்தத் திட்டம் அவசியமானது," என திமிங்கில வேட்டைக்கான பன்னாட்டு ஆணையத்துக்கான தென் கொரியத் தூதுக்குழு தெரிவித்துள்ளது. இத்திட்டம் எப்போது ஆரம்பமாகும் என தென் கொரியா தெரிவிக்கவில்லை. கொரியாவின் இந்த அறிவிப்பை பல உலக நாடுகள் கண்டித்திருக்கின்றன.


கரையோர திமிங்கில வேட்டையாடுதலை மீளத் துவங்குவதே தென் கொரியாவின் முக்கிய குறிக்கோள் என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


மூலம்

தொகு