தென்னிலங்கையின் மாத்தறை முருகன் கோயிலில் 37 ஆண்டுகளின் பின் தேர்த்திருவிழா

சனி, ஆகத்து 8, 2009, மாத்தறை, இலங்கை:

இலங்கை வரைபடத்தில் மாத்தறை மாவட்டம்


மாத்தறை, அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா உற்சவம் 37 ஆண்டுகளின் பின்னர் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.


1983 இனக்கலவரத்தின் பின்னர் நித்திய, நைமித்திய பூசைகள் எதுவுமின்றி மூடப்பட்டிருந்த இக்கோயில் 1986 ஆம் ஆண்டில் புனரமைப்பு செய்யப்பட்டதுடன் பூஜைகளும் நடைபெற்றன. தெற்கில் ஏற்பட்ட சில பதற்ற நிலைமைகள் காரணமாக 2005ஆம் ஆண்டு வரை பூசைகள் நடைபெறாமல் இருந்தது. 2005 ஆம் ஆண்டின் பின்னர் வழமை போன்று நித்திய பூசைகள் மட்டுமே நடைபெற்றன.


1940களில் கட்டப்பட்ட மேற்படி கோவிலில் இறுதியாக 1972 ஆம் ஆண்டே தேர்த்திருவிழா நடைபெற்றது.


நேற்று இரவு 7.00 மணிக்கு வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்றன. 8.00 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளியதுடன் நள்ளிரவு 12.00 மணி வரை தேர்த் திருவிழா நடைபெற்றது. ஆலய விசேட பூசைகளை பிரம்மஸ்ரீ தர்மராஜ குருக்கள் நடத்தினார்.

மூலம் தொகு