தென்கிழக்கு ஈரானில் பெரும் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு
செவ்வாய், திசம்பர் 21, 2010
ஈரானில் இருந்து ஏனைய செய்திகள்
- 18 பெப்பிரவரி 2018: இரான் நாட்டின் வானூர்தி மலையில் மோதி விபத்துக்குள்ளானது
- 7 சனவரி 2018: ஈரானிய எண்ணெய் கப்பல் சீன சரக்கு கப்பலுடன் மோதியதில் 32 பேரை காணவில்லை
- 28 சனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 17 சனவரி 2016: ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடை விலக்கப்பட்டது
- 26 அக்டோபர் 2013: ஈரான் 'பழி வாங்கும் நடவடிக்கையாக' 16 போராளிகளைத் தூக்கிலிட்டது
ஈரானின் அமைவிடம்
தென்கிழக்கு ஈரானில் பலம் வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். கேர்மன் மாகாணத்தில் பல கிராமங்கள் சேதமடைந்தன.
உள்ளூர் நேரப்படி இரவு 8:12 மணிக்கு (1842 ஒசநே) இடம்பெற்ற இந்த நிலநடுக்கம் 6.5 அளவுடையதாக பாம் நகரை மையப்படுத்தியிருந்ததாக கேர்மன் மாகாண ஆளுநர் தெரிவித்தார். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பலர் இன்னும் அழிபாடுகளிடையே சிக்குண்டுள்ளதாகவும், மாகாணத்துக்கான தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரானியத் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
ஈரானின் சிஸ்டன்-பலுச்சித்தான் மாகாணத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாம் நகரில் 2003 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 26,000 பேர் இறந்தனர்.
மூலம்
தொகு- Powerful earthquake hits south-east Iran, பிபிசி, டிசம்பர் 21, 2010
- Deadly earthquake hits Iran, அல்ஜசீரா, டிசம்பர் 21, 2010