துருக்கிக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது
சனி, அக்டோபர் 10, 2009, சுவிட்சர்லாந்து:
ஆர்மீனியாவுக்கும் துருக்கிக்கும் இடையே கிட்டத்தட்ட நூறாண்டுகளாக இருக்கும் பகையுணர்வை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக இரு நாடுகளுக்கும் இடையே வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் அமைதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் கைச்சாத்தானது.
முதலாம் உலக போரின் போது 1915 ஆம் ஆண்டில் ஒட்டோமான் படைகள் ஆர்மீனியர்களை கொன்று குவித்ததை அடுத்து இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமாக இருந்து வருகிறது.
அப்போது நடைபெற்றது இன ஒழிப்பு என்பதை துருக்கி ஒப்பு கொள்ள வேண்டும் என்று ஆர்மீனியா கூறி வருகிறது. ஆனால் துருக்கி ஒரு போதும் இதை ஏற்கவில்லை.
இரு நாடுகளும் ஒரு சுமூகமான ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தி வந்துள்ளார். ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் சைச்சாத்திடும் வைபவத்தில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் இலறி கிளிண்டன், மற்றும் உருசிய வெளிய்றவு அமைச்சர் செர்கே லாவ்ரொவ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவ்வொப்பந்தம் இரு நாடுகளும் தூதரக உறவுகளை ஏற்படுத்தவும், தமது எல்லைகளைத் திறந்து விடவும் வழி வகுக்கும். ராஜாங்க உறவு தொடர்பான ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் கையொப்பமாகினாலும், அது இருநாட்டு நாடாளுமன்றத்தினாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
மூலம்
தொகு- "Armenia and Turkey normalise ties". பிபிசி, அக்டோபர் 10, 2009
- "Turkey, Armenia eye peace deal afafterer century-old enmity". ராய்ட்டர்ஸ், அக்டோபர் 10, 2009