தானியங்கி அல்பா நாய் அறிமுகம்

திங்கள், அக்டோபர் 3, 2011

நாயைப் போன்ற உடல் அமைப்புக் கொண்ட ஆனால் நாயை விட பல மடங்கு பெரிய தானியங்கி ஒன்றின் முன்வடிவம் ஒன்றை அதைத் உருவாக்கும் அமெரிக்காவின் பொசுட்டன் டைனாமிக்சு நிறுவனம் காட்சிப்படுத்தியது.


இந்த நாய் ஐக்கிய அமெரிக்கப் படைத்துறைக்காக அதன் ஆய்வு நிறுவன நிதி உதவியுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த தானியங்கியின் முழுப் பெயர் காலாட் படை ஆதரவு ஒருங்கியம் (Legged Squad Support System) என்பது ஆகும்.


இந்த நாய் 400 இறாத்தல்கள் சுமக்கக் கூடியது. 24 மணித்தியாலங்களுக்குள் 20 மைல் போகக் கூடியது. கணினிப் பார்வையுடன் குறிப்பிடப்பட்ட இடத்துக்குப் போகக் கூடியது. பல்வேறு போர்ப் பயன்பாடுகளையும் கொண்டது.


மூலம் தொகு