தானியங்கியின் கைகளுக்கு செலவு குறைந்த மென்மையான தொட்டறி உணரி கண்டுபிடிப்பு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, ஏப்பிரல் 19, 2013

ரோபாட் என அழைக்கப்படும் தானியங்கிகளின் முரட்டுத்தனமான கைகளுக்கு மென்மையான செயல்பாட்டை உணர்த்தும் விதமாக அதிக செலவில்லாத தொட்டறி உணரி ஒன்றை அமெரிக்காவின் மாசச்சூசெட்சு மாநிலத்தில் உள்ள ஆர்வார்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


இந்த ஆய்வின் பொழுது உருவாக்கப்பட்ட தொட்டறி உணரியானது முக்கியப் பங்கு வகிக்கிறது. இக்கண்டுபிடிப்பு தானியங்கியலில் ஒரு புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இக்குறைந்த விலைத் தொட்டறி உணரியின் பெயர் டாக்டைல் (TakkTile) என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு சிறிய காற்றழுத்தமானியும், வெற்றிடம் அடைத்த இரப்பரின் அடுக்கு ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வுணரி காற்று அழுத்தத்தை உணரவும், 20 பவுண்டு நேரடி அழுத்தத்தை எதிர்கொள்ளவும் முடியும் என ஆய்வாளர்கள் கூறினர்.


இவ்வளவு நாட்களாய் இது போன்ற தொட்டறி உணரிகள் மிக விலை உயர்ந்ததாக இருந்தது. சுமார் 16000 டாலர் விலை மதிப்புள்ளது. அதனாலேயே வணிக ரீதியாக இது வெற்றியடையவில்லை. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எளிதான விலை மலிவானதான ஒரு தொட்டறி உணரியானதால் இது வணிக ரீதியில் வெற்றியடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் இது மென்மையான செயல்பாட்டினை கையாளுவதால் இதனை மருத்துவ சிகிச்சை செய்யக்கூடப் பயன்படுத்த முடியும் என்கிறார்கள் சென்டோஃப்டு மற்றும் டென்சர் ஆகியோர். இதனை பொம்மைத் தயாரிக்கும் நிறுவனங்களும் பயன்படுத்தலாம் என்றும் அவர்கள் கூறினர். இந்த ஆய்வுக்கு பிறகு இவர்களுக்கு சில வர்த்தக வாய்ப்புகளும் கிடைத்துள்ளது.


மூலம்

தொகு