தமிழிசைக்கான அகரமுதலி வெளிவருகிறது

சனி, திசம்பர் 26, 2009


தமிழிசைக்கென அகர வரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள இசைச் சொற்களை கொண்டு தமிழ் மொழியில் ஒரு அகராதி வெளிவருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழிசைக்கான சொற்களை தேர்ந்தெடுத்து இந்த அகராதி தொகுக்கப்பட்டு வருகிறது.


தொல்காப்பியம் முதல் இன்று வரையுள்ள தமிழ் நூல்களில் இருந்து சொற்களை தேர்ந்தெடுத்து, அவற்றை அகர வரிசைப்படுத்தி, அதற்குரியப் பொருளுடன், இந்த அகரமுதலி தொகுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொகுத்து வருபவர் ஓய்வு பெற்ற தமிழக அரசு அதிகாரியான நா. மம்மது.


இந்த அகராதியின் முதல் பதிப்பில் ஐயாயிரத்துக்கும் மேலான பதிவுகள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த இசை அகராதி ஒரு துறை அகராதி என்றும் மம்மது அவர்கள் தெரிவிக்கிறார். பழங்கால தமிழிசை முதல் தற்காலத்தில் பாடப்பட்டு வரும் கருநாடக இசைப் பாடல்கள் தொடர்பான சொற்களும் பதங்களும் அந்த அகராதியில் இருப்பதாகவும் மம்மது அவர்கள் பிபிசி தமிழோசைக்குக் கூறினார்.

மூலம்

தொகு