சோமாலியா தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு

ஞாயிறு, சனவரி 31, 2010


சோமாலியாவின் தலைநகர் மொகதிசுவில் இசுலாமியப் போராளிகள் ஆப்பிரிக்க அமைதிப் படைகளுடனும், சோமாலிய இராணுவத்துடமும் மோதலி ஈடுபட்டதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். பல மணி நேரம் இத்தாக்குதல் இடம்பெற்றதாக அங்க்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அல்-சபாப் என்ற போராளிக் குழு இத்தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.


சோமாலியாவில் மொகதிசுவின் அமைவிடம்

இத்தாக்குதலில் இறந்தவர்கள் அனைவரும் பொது மக்கள் எனவும், மேலும் 25 பேர் வரையில் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறட்து. மோட்டார் குண்டுகள் வீடுகளின் மீது வீழ்ந்ததாலேயே பொதுமக்கள் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இரு தரப்பிடம் இருந்தும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தில் தாயும் இரு பிள்ளைகளும் இறந்தவர்களில் அடங்குவர்.


வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு தாக்குதல் ஆரம்பமானது. பலர் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.


2007 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு தாக்குதல்களில் 20,000 சோமாலியர்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். 1,5 மில்லியம் மக்கள் வரை நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.


அல்-சபாப் போராளிக் குழு ஐக்கிய அமெரிக்காவில் பயங்கரவாதப் பட்டியலில் இடப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் எத்தியோப்பியா, ஜிபூட்டி, கென்யா, எரித்திரியா, கானா, சூடான், உகாண்டா உட்படப் பல ஆப்பிரிக்க நாடுகளில் இவ்வமைப்பு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

மூலம் தொகு