சென்னை கிறித்தவக்கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சி

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

வெள்ளி, சூலை 26, 2013 சென்னை கிறித்தவக்கல்லூரியில், தமிழியல் ஆய்வு மன்றத்தின் சார்பில் 26.07.2013, வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11 மணி அளவில், கலைப்புல அறை எண் 110 இல் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சி நிகழ உள்ளது. இந்நிகழ்வில், தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் ந. இளங்கோ வரவேற்புரை நிகழ்த்தவும் தமிழ்த்துறைப்பேராசிரியர் மற்றும் தலைவர் கு. அரசேந்திரன் தலைமையுரை நிகழ்த்தவும் உள்ளனர்.பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை துணைப்பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள் ஆகிய பொருண்மைகளில் சிறப்புரை நிகழ்த்தி செய்முறைப் பயிற்சி அளிக்கவுள்ளார். ஆர்வமுள்ளவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கலாம்.