சூடானுக்கு அருகில் செங்கடலில் படகு மூழ்கியதில் 197 பேர் உயிரிழந்தனர்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வியாழன், சூலை 7, 2011

சட்டவிரோதக் குடியேறிகள் 200 பேரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று செங்கடல் பகுதியில் சூடான் கரையோரத்துக்கு அப்பால் தீப்பிடித்து மூழ்கியதில் 197 பேர் கொல்லப்பட்டதாக சூடானியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூவர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளனர்.


சவுதி அரேபியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இப்படகில் தீ பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் பலர் சோமாலியர்கள் எனவும் அங்கு நிலவும் கடும் வறட்சி காரணமாக வெளியேறியவர்கள் எனவும் கூறப்படுகிறது. எரித்திரியா எல்லைக்கு அருகில் சூடான் துறைமுகத்துக்கு தெற்கே 150 கிமீ தூரத்தில் இவ்விபத்து ஏற்பட்டது.


சவுதி அரேபியா, மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்குக் குடி பெயர்பவர்கள் செங்கடல் வழியையே தெரிந்து எடுக்கின்றனர்.


விபத்துக்கு காரணமான நான்கு ஏமன் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். கடல் வழியாக 247 பேர் கடத்திச் செல்லும் முயற்சியையும் சூடான் உள்ளூர் நிர்வாகத்தினர் முறியடித்தனர்.


மூலம்

தொகு