சூடானின் எபியாய் பிராந்தியத்தின் எல்லைத் தகராறு முடிவுக்கு வந்தது

புதன், சூலை 22, 2009 சூடான்:

சூடானின் எபியாய் பகுதி


ஆப்பிரிக்க நாடான சூடானில் வடக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களுக்கு இடையில், எல்லைத் தகராற்றில் ஈடுபட்டிருந்த இரண்டு தரப்பினரும் முதற்தடவையாக சர்வதேச நீதிமன்றமொன்றின் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.


2005 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரில் பல தசாப்தங்களாக தீர்க்கப்படாதிருந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, சூடானில் எண்ணெய் வளம் அதிகமுள்ள எபியாய் பிராந்தியத்தின் புதிய எல்லைகளை த ஹேக்கின் சர்வதேச நீதிமன்றமொன்றின் இந்த தீர்ப்பு வரையறை செய்துள்ளது.


சர்ச்சைக்குரிய எண்ணெய்வள பிராந்தியமொன்றை வடக்கு சூடானுக்கு கைமாற்றியதன் மூலம், இந்தத் தீர்ப்பு அப்பிராந்தியத்திலிருந்த தெற்கு சுடானின் நிலப்பரப்பினை சுருக்கியுள்ளது.


இந்தத் தீர்ப்பினை தமது வெற்றியாக வடக்கு சுடான் அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அதனை நடுநிலையான தீர்ப்பாக வர்ணித்துள்ள தெற்கு சுடானை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் ஆயுதக் குழுவான சுடான் மக்கள் விடுதலை இயக்கம் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு மதிப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மூலம் தொகு