சுவாங்கிராயின் எதிர்ப்பை சிம்பாப்வே அதிபர் நிராகரித்தார்
திங்கள், அக்டோபர் 19, 2009
சிம்பாப்வேவில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்திற்கு அதிபர் ராபர்ட் முகாபே தலைமை ஏற்பார் என அரச ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக பிரதமர் மோர்கன் சுவாங்கிராயின் கட்சியினர் கூறியுள்ள போதிலும் இது நடைபெறவுள்ளது.
பிரதமர் மோர்கன் ஸ்வாங்கிராயின் இந்த முடிவு ஏமாற்று வேலை என்றும், இதனால் எவ்வித மாற்றமும் வந்து விட போவதில்லை எனவும் அதிபர் ராபர்ட் முகாபேவின் சார்பில் பேசவல்லவர் கூறினார்.
அத்தோடு சண்டே எரால்ட் செய்தித்தாளிடம் பேசிய இவர், அதிபர் ராபர்ட் முகாபே நேரம் கிடைக்கும் போது அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என்றும், தற்சமயம் மாணவர்கள் மற்றும் கால்பந்து விவகாரங்களை தீர்ப்பதில் அதிபர் கவனம் செலுத்தி வருகிறார் என்றும் கூறினார்.
மூலம்
தொகு- "ZANU-PF Says Zimbabwe Gov't Will Operate Without MDC". வாய்ஸ் ஒஃப் அமெரிக்கா, அக்டோபர் 18, 2009
- Agence France-Presse "Mugabe spokesman dismisses unity boycott". கூகுள் செய்திகள், அக்டோபர் 18, 2009