சீனா உலகின் இரண்டாவது பெரும் பொருளாதாரமாக சப்பானை முந்தியது

திங்கள், பெப்பிரவரி 14, 2011

உலகின் இரண்டாவது பெரும் பொருளாதார நாடாக சீனா சப்பானை முந்தியது.


2010 ஆம் ஆண்டில் இறுதியில் சப்பானின் பொருளாதாரம் $5.474 திரிலியன் ஆக இருந்தது. இதே காலப்பகுதியில் சீனாவின் பொருளாதாரம் $5.8 திரிலியனை எட்டியுள்ளது. ஏற்றுமதி மற்றும் நுகர்வோர் தேவை ஆகியவை சப்பானில் வீழ்ச்சி அடைந்துள்ள அதே வேளையில் சீனாவில் உற்பத்தி அதிகரித்துள்ளது.


சீனா இதே போன்ற பொருளாதார வளர்ச்சியுடன், அடுத்த பத்தாண்டுகளில் ஐக்கிய அமெரிக்காவை முந்தும் என ஆய்வாளர்கள் கருதுவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.


"10 ஆண்டுகளில் சீனாவின் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதாரத்தை எட்டும் என்பது உண்மை," என பெய்ஜிங்கைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் டொம் மில்லர் தெரிவித்தார்.


நாற்பது ஆண்டுகளில் முதல் தடவையாக சப்பான் இரண்டாவது பெரும் பொருளாதாரம் என்ற நிலையில் இருந்து வீழ்ந்துள்ளது.


மூலம் தொகு