கிரேக்கப் பொதுத்தேர்தலில் சோசலிசக் கட்சி பெரு வெற்றி

திங்கள், அக்டோபர் 5, 2009


கிரேக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான பாசொக் என்ற சோசலிஸக் கட்சி வெற்றியீட்டியது. 2004, 2007 ஆம் ஆண்டுகளில் தோல்வியடைந்த இக்கட்சி இம்முறை ஆட்சியைக் கைப்பற்றியது.


பாசொக் கட்சியின் தலைவர் ஜார்ஜ் பப்பாண்ட்ரியூ அரசாங்கம் அமைப்பதற்கான காய் நகர்த்தல்களில் ஈடுபட்டுள்ளார்.


கட்சியின் வெற்றிச்செய்தியைக் கேள்வியுற்ற பப்பாண்ட்ரியு ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது குறிப்பிட்டதாவது:-


கிரேக்கத்தின் வரலாற்றையும், மக்களின் எதிர்காலத்தையும் மாற்றியமைக்கும் வெற்றி இது. இரண்டு ஆண்டுகளுக்குள் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகள் காணப்படும். பிழையான கொள்கைகளை மக்கள் நிராகரித்துவிட்டனர் எனக் கூறினார்.


நாம் எடுத்துக்கொண்ட பாதையில் நாம் அனைவரும் இன்று ஒன்றுபட்டு நிற்கிறோம்

—ஜோர்ஜ் பப்பாண்ட்ரியு

கட்சியின் ஆதரவாளர்கள் வீதிகளில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மேளம் அடித்தவாறு ஊர்வலம் வந்தனர். பச்சைக் கொடிகளை அசைத்து மகிழ்ச்சி வெளியிட்டனர். கிரேக்கத்தின் பிரதமர் கர்மான்சிஷ் தனது பழமை பேணும் கட்சியான புதிய மக்காளாட்சிக் கட்சி தோல்வியடைந்ததையடுத்து பதவி விலகினார். இவரின் ஆட்சிக்காலத்தில் கிரேக்கம் கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர் கொண்டதால் மக்கள் இவரது ஆட்சியை நிராகரித்தனர்.


கிரேக்கப் பாராளுமன்றத்தில் உள்ள முன்னூறு ஆசனங்களில் 160 இடங்களை பாசொக் கட்சி பெற்றுள்ளது. ஆளும் கட்சி 91 இடங்களையே பெற்றது.

மூலம்