அதிமுகவிலிருந்து சசிகலா குடும்பத்தினர் நீக்கப்படுவதாக செயலாளர் ஜெயலலிதா அறிவிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: மேலோட்டமான மாற்றங்கள்
 
வரிசை 2:
{{date|december 20, 2011}}
 
தமிழக முதல்வர் [[w:ஜெயலலிதா|ஜெயலலிதா]]வுக்கு நெருக்கமான தோழி எனக் கருதப்படும் சசிகலாவையும் அவரின் குடும்பத்தினர்களான சசிகலாவின் கணவர் நடராஜன், வளர்ப்பு மகன் சுதாகர் உட்பட திவாகரன், பாஸ்கரன், வெங்கடேஷன், ராமச்சந்திரன், ராஜராஜன், குலோத்தூங்கன், ராவணன், மோகன் ஆகிய 12 பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து இருந்து நீக்கப்படுவதாக அதிமுக செயலாளர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார்.
 
 
எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்த ஜெயலலிதா, சசிகலாவை உற்ற தோழியாக தனக்கு அருகிலேயே வைத்துக் கொண்டார். நாளுக்கு நாள் இவர்களது நட்பு உச்சத்தை பெற்றது. இதனையடுத்து, ஜெயலலிதா ஆட்சியில், சசிகலா ஜெயலலிதாவிற்கு அறிவுரை வழங்கி வந்தார். மேலும் தன் குடும்பத்தினரையும் ஒவ்வொருவராக கட்சியில் சேர்க்க வைத்தார். சசிகலாவின் அக்காள் மகன்கனான சுதாகரை வளர்ப்பு மகனாக அறிவித்தார். அதுமட்டுமின்றி தன் வளர்ப்பு மகன் திருமணத்தை தமிழகமே வியக்கும் வண்ணம் பிரம்மாண்டாக ஜெயலலிதா நடத்தியிருந்தார்.
 
 
வரிசை 16:
இச்செய்தி வெளியாகியதும், திருப்பூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே கூடிய அ.தி.மு.க.வினர் சிலர், பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். நிர்வாகிகள் ஒன்பது பேர் மொட்டை அடித்து பட்டாசு வெடித்தனர். கட்சித் தொண்டர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
 
== மூலம் ==
* [http://news.webindia123.com/news/Articles/India/20111219/1894362.html Jaya sacks Sasikala, her family members from AIADMK], webindia, டிசம்பர் 19, 2011
* [http://news.chennaionline.com/newsitem.aspx?NEWSID=3ee89717-02aa-4aea-acf4-b08f0ceb6a0a&CATEGORYNAME=CHN Jaya sacks Sasikala, her family memebrs from AIADMK ], chennaionline, டிசம்பர் 19, 2011
* [http://news.chennaionline.com/newsitem.aspx?NEWSID=3ee89717-02aa-4aea-acf4-b08f0ceb6a0a&CATEGORYNAME=CHNJaya sacks Sasikala, her family memebrs from AIADMK ], onlanka, டிசம்பர் 19, 2011
* [http://www.dinamalar.com/News_Detail.asp?Id=370432அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா திடீர் நீக்கம் - போயஸ் தோட்டத்தில் இருந்தும் வெளியேற்றம் ],தினமலர், டிசம்பர் 19, 2011
* [http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=524703&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=சசிகலா குடும்பத்தினர் அதிமுகவிலிருந்து நீக்கம்],தினமணி, டிசம்பர் 19, 2011
* [http://tamil.oneindia.in/news/2011/12/19/tamilnadu-jaya-sacks-her-friend-sasikala-her-family-members-admk-aid0091.html ஜெ. வரலாறு காணாத அதிரடி- அதிமுகவிலிருந்து சசி உள்பட மன்னார்குடி குடும்பமே கூண்டோடு நீக்கம்!!!], தட்ஸ்தமிழ், டிசம்பர் 19, 2011
{{publish}}
 
[[பகுப்பு:தமிழ்நாடு]]
[[பகுப்பு:இந்தியா]]