பூமிக்கு அருகில் உயிரினம் வாழத்தக்க கோள் ஒன்றை ஆத்திரேலிய அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{வானியல்}} {{date|December 18, 2015}} 14 ஒளி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:30, 19 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

வெள்ளி, திசம்பர் 18, 2015

14 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உயிரினம் வாழத்தகுந்த சூழலுள்ள கோள் ஒன்றைத் தாம் கண்டுபிடித்துள்ளதாக ஆத்திரேலிய அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர்.


ஊல்ஃப் 1061 என்ற சூரியனைச் சுற்றி வரும் இக்கோளுக்கு ஊல்ஃப் 1061சி (Wolf 1061c) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இச்சூரியன் பூமிக்குக் கிட்டவாகவுள்ள 35வது சூரியனாகும்.


மூன்று கோள்கள் செங்குறளி விண்மீனான ஊல்ஃப் 1061 ஐச் சுற்றி வருவதாக நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டங்கன் ரைட் தெரிவித்தார். இம்மூன்றும் பூமி, மற்றும் வெள்ளியைப் போன்று பாறைகளாலானவை என நம்பப்படுகிறது.


இம்மூன்று கோள்களில் ஒன்று அவற்றின் சூரியனுக்கு மிகக் கிட்டவாக உள்ளதால் அங்கு வாழத்தகுந்த சூழல் இல்லை என நம்பப்படுகிறது. மற்றையது மிகத் தூரத்தில் உள்ளதால் அது மிகவும் குளிரானதாக உள்ளது. மூன்றாவது இடைத்தூரத்தில் உள்ளதால் அங்கு உயிரினங்கள் வாழக்கூடிய சூழல் உள்ளது. இது கிட்டத்தட்ட 130 திரிலியன் கிமீ தூரத்தில் (14 ஒளியாண்டு) தூரத்தில் உள்ளது.


ஊல்ஃப் 1061சி 18 நாட்களுக்கு ஒரு தடவை தனது சூரியனை சுற்றி வருகிறது. ஆனாலும், ஊல்ஃப் 1061 விண்மீனின் வெப்பநிலை (3,300 கெல்வின்) நமது சூரியனின் வெப்பநிலையுடன் (5800 கெ) ஒப்பிடும்போது குறைந்ததாகும்.


மூலம்