2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: இலங்கை எ. சிம்பாப்வே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[மறுநோக்கு சோதிக்கப்படவில்லை][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி திருத்தம்
வரிசை 1:
{{date|March 11, 2011}}
குழு ஏ பிரிவில் கண்டி பள்ளேகல துடுப்பாட்ட மைதானத்தில் இலங்கை சிம்பாப்வே அணிகளுக்கிடையில் நேற்று வியாழக்கிழமை மார்ச் 10, 2011ல் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியைச் சேர்ந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான திலக்கரத்ன டில்சான், உப்புல் தரங்க ஆகியோர் இணைந்து முதலாவது விக்கட்டுக்காக பெற்ற 282 ஓட்டங்கள் துடுப்பாட்டக் கிண்ணம் இணைப்பாட்ட வரலாற்றில் புதிய சாதனையாகும். முதலாவது விக்கட்டுக்கான இணைப்பாட்டமாக மாத்திரமன்றி துடுப்பாட்டக் கிண்ணப் போட்டிகளில் சகல விக்கட்டுக்களுக்குமான இணைப்பாட்டமாக இது கொள்ளப்படுகின்றது. இந்த சோடி மேலும் ஐந்து ஓட்டங்களை எடுத்திருந்தால் ஒரு நாள் போட்டிகளில் மிக அதிக ஓட்டங்களை எடுத்த சோடி என்ற சாதனையை இவர்கள் பெற்றிருக்க முடியும். இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் உபுல் தரங்காவும் ஜெயசூர்யாவும் முதல் விக்கெட்டுக்கு 286 ஓட்டங்களை எடுத்திருந்தனர்.
{{விளையாட்டு}}
 
குழு ஏ பிரிவில் கண்டி பள்ளேகல துடுப்பாட்ட மைதானத்தில் இலங்கை சிம்பாப்வே அணிகளுக்கிடையில் நேற்று வியாழக்கிழமை மார்ச் 10, 2011ல் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியைச் சேர்ந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான [[w:திலக்கரத்ன டில்சான்|திலக்கரத்ன டில்சான்]], [[w:உப்புல் தரங்க|உப்புல் தரங்க]] ஆகியோர் இணைந்து முதலாவது விக்கட்டுக்காக பெற்ற 282 ஓட்டங்கள் [[w:2011 உலக துடுப்பாட்டக் கிண்ணம்|துடுப்பாட்டக் கிண்ணம்]] இணைப்பாட்ட வரலாற்றில் புதிய சாதனையாகும். முதலாவது விக்கட்டுக்கான இணைப்பாட்டமாக மாத்திரமன்றி துடுப்பாட்டக் கிண்ணப் போட்டிகளில் சகல விக்கட்டுக்களுக்குமான இணைப்பாட்டமாக இது கொள்ளப்படுகின்றது. இந்த சோடி மேலும் ஐந்து ஓட்டங்களை எடுத்திருந்தால் ஒரு நாள் போட்டிகளில் மிக அதிக ஓட்டங்களை எடுத்த சோடி என்ற சாதனையை இவர்கள் பெற்றிருக்க முடியும். இதற்கு முன் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் உபுல் தரங்காவும் ஜெயசூர்யாவும் முதல் விக்கெட்டுக்கு 286 ஓட்டங்களை எடுத்திருந்தனர்.
 
 
சிம்பாப்வே அணியின் தலைவர் சிக்கும்புரா நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். அதற்கிணங்க திலக்கரத்ன டில்சான் உப்புல் தரங்க சோடி இருவரும் 45 ஓவர்கள் விளையாடி உலகக் கிண்ணப் போட்டியில் எந்த விக்கெட்டுக்குமான அதிகூடிய ஓட்டமாக 282 ஓட்டங்களைப் பெற்றனர். உப்புல் தரங்க 141 பந்துகளை எதிர்கொண்டு 17 பெளண்டரி அடங்கலாக 133 ஓட்டங்கள் பெற்று மெளபுவின் பந்தில் அணித் தலைவர் சிக்கும்புராவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து டில்சான் ஆட்டமிழந்தார். இவர் 131 பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிக்சர் மற்றும் 16 பெளண்டரிகள் உட்பட 144 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 327 ஓட்டங்களைப் பெற்றது. திஷார பெரேரா 3 ஓட்டங்களுக்கும். மகேல 9 ஓட்டங்களுக்கும், மெத்திவ் ஓட்டம் எதுவும் பெறாமலும், சாமர சில்வா 4 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். அணித் தலைவர் சங்கக்கார ஆட்டமிழக்காமல் 11 ஓட்டங்களையும், சமரவீர ஆட்டமிழக்காமல் 8 ஓட்டங்களையும் பெற்றனர். சிம்பாப்வேயின் மெளபு 7 ஓவர்கள் பந்து வீசி 62 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும் பிரைஸ், உடசேயா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் பெற்றனர்.
 
 
இந்நிலையில் பதிலெடுத்தாடிய சிம்பாப்வே அணி 39 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 188 ஓட்டங்களைப் பெற்று 139 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. சிம்பாப்வே அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக பிரண்டன் டைலர், சக்காபுவா ஆரம்ப ஜோடி 116 ஓட்டங்களைப் பெற்றது.
 
 
இதில் டைலர் 72 பந்துகளில் ஒரு சிக்சர், 9 பெளண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்களைப் பெற்றார். மறுபுறத்தில் சக்காபுவா 61 பந்துகளில் 3 பவுண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து வந்த ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர். பந்துவீச்சில் டில்சான் 4 விக்கெட்டுகளையும் முரளிதரன் 3 விக்கெட்டுக்களையும் மத்தியூஸ் 2 விக்கெட்டுக்களையும் பெரேரா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். போட்டியில் 139 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டி குழு ஏ பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியது. இப்போட்டியில் ஆட்டநாயகனாக டில்சான் தெரிவானார்.
வரி 10 ⟶ 16:
* [http://www.bbc.co.uk/tamil/news/story/2011/03/110310_slbeatszim.shtml இலங்கை துவக்க ஆட்டக்காரர்கள் புதிய சாதனை], பிபிசி, மார்ச்சு 11, 2011
* [http://www.thinakaran.lk/2011/03/11/?fn=s1103111 சிம்பாப்வேயை வீழ்த்தி இலங்கை காலிறுதியில்], தினகரன், மார்ச்சு 11, 2011
{{publish}}
{{DEFAULTSORT:உலகத் துடுப்பாட்டக் கிண்ணம் இணைப்பு சாதனை}}
[[பகுப்பு:துடுப்பாட்டம்]]
[[பகுப்பு:விளையாட்டு]]