லிபியாவில் பிபிசி குழுவினர் கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்பட்டனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

[சோதிக்கப்பட்ட மேலாய்வு][சோதிக்கப்பட்ட மேலாய்வு]
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
சி திருத்தம்
வரிசை 2:
{{லிபியா}}
 
[[லிபியாவில்லிபியா]]வில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரில் செய்தி சேகரித்துக்கொண்டிருக்கும் பிபிசி தொலைக்காட்சி குழுவினர் மூன்று பேரை அந்நாட்டு இராணுவத்தினர் கைது செய்து சித்ரவதை செய்துள்ளனர்.
 
சித்ரவதைக்குள்ளான கிரிஸ் காப் ஸ்மித், கோக்தே கொரால்தான், மற்றும் பெராசு கிலானி ஆகியோர் நடந்த சம்பவங்களை விவரித்துள்ளனர். இதில் பெராசு கிலானி பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அகதியாவார். பிபிசியில் நிருபரான இவரை தனியாக அழைத்துச் சென்று பூட்ஸ் காலால் உதைந்தும் பிளாஸ்டிக் பைப்பினால் முதுகில் அடித்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர். அவர் தான் நிருபர் என்று சொல்லியும் கேட்கவில்லை. அவர் முன்பு ஒலிபரப்பிய செய்திகளை அந்த இராணுவ அதிகாரிகள் ஏற்கெனவே கண்டிருப்பதாகவும் அதனால் அவரின் செவ்வியில் கோபம் கொண்டிருந்ததாகவும் பெராசு தெரிவிக்கிறார். மேலும் பாலஸ்தீனர்கள் நன்றி கெட்டவர்கள் என்று சொல்லியதாகவும் தெரிவிக்கிறார்.