சந்திரயான்-1 விண்கலத்தின் உணர்வீ செயலிழப்பு

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

வெள்ளி, சூலை 17, 2009 இந்தியா:


இந்தியாவின் சந்திரனை நோக்கிய மிகப்பெரிய விண்வெளித் திட்டமான சந்திரயான்-1 செயற்கைக்கோளில் உள்ள விண்மீன் உணர்வீ (Stars sensors) பழுதடைந்திருப்பதால், இந்த செயற்கைக்கோள் முன் கூட்டியே செயலிழக்கக்கூடும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.


சந்திரயானில் இடம்பெற்றுள்ள ஸ்டார் சென்சார் கருவியானது செயல்படாமல் போனதால், இத்திட்டம் முன் கூட்டியே முடிவுக்கு வரும் என்று


சந்திரனை ஆய்வு செய்வதில் உணர்வீ மிக முக்கியப் பங்காற்றக்கூடியவை. இந்த பிரச்சனையை சமாளிக்க அண்டெனா தொழில்நுட்பத்தை உருவாக்கி இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆயினும் இதனை எவ்வளவு நாட்களுக்கு நீடித்து வைத்திருக்க முடியும் என்பதில் இஸ்ரோ உறுதியாக இல்லை. ‘இதனை எவ்வளவு நாள் நீடித்து வைத்திருக்க முடியும் என்பதை நாங்கள் உறுதியாக கூற முடியாது. 2 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்ட விண்கலத்தின் ஆயுட்காலம் குறையக்கூடும்’ என்று பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் - இஸ்ரோ செய்தித்தொடர்பாளர் எஸ். சதீஷ் தெரிவித்துள்ளார். என்றாலும் தற்போது வரை சந்திரயான் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2008 அக்டோபர் மாதம் 22ஆம் தேதியன்று சந்திரயான்-1 செயற்கைக்கோள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

மூலம்

தொகு