கோயமுத்தூர் கோனியம்மன் கோயில் தேர் திருவிழா

புதன், மார்ச்சு 6, 2019

கோயமுத்தூர் கோனியம்மன் கோயில் தேர். தேதி 06 மார்ச்சு 2019

கோயமுத்தூர்கோனியம்மன் கோயில் தேர் திருவிழா ஆறு மார்ச்சு 2019 (புதன் கிழமை), தமிழ் மாதம் பங்குனியில் நடைபெற்று வருகிறது.

மாசி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு 19 பிப்ரவரி 2019 அன்று கோயிலில் பூச்சாட்டுவேன் தொடங்கியது.

கோயமுத்தூரில் பிரசித்தி பெற்ற இக்கோயில், நகரின் மையப்பகுதியான டவுன் ஹாலில் உள்ளது. இக்கோயிலின் தேர், ராஐவீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காலை மக்கள் அனைவரும் வந்து தேரின் மீது கல் உப்பு மற்றும் மிளகு வீசுவர். மதியம் 1 மணியளவில் தேர் உலா செல்ல புறப்படும். பக்தர்கள் அனைவரும் சேர்ந்து தேர் இழுத்து நான்கு வீதிகளில் ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியால் வீதி, கருப்ப கவுண்டர் வீதியாக வந்து மீண்டும் ராஜ வீதி, தேர் முட்டியில் வந்து சேர்ந்து விடும். தேர் பார்க்க வரும் மக்களுக்கு விலையின்றி நீர் மோர், பானகம், உணவு போன்றவை பொதுமக்கள் பலரால் கொடுக்கப்படும். கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.

மூலம்

தொகு
 
Wikinews
இக்கட்டுரை விக்கிசெய்திகளின் உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட நேரடிச் செய்தியாகும்.