காபொனில் அதிபர் தேர்தலை அடுத்து கலவரம் மூண்டது

வியாழன், செப்டம்பர் 3, 2009, காபொன்:


மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான காபோனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிபர் தேர்தலில் மறைந்த முன்னாள் பிரதமர் ஒமர் பாங்கோவின் மகன் அலி பாங்கோ வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு படையினருக்கும் எதிர்க் கட்சியினருக்கும் இடையில் மோதல்கள் வெடித்துள்ளன.


இந்தத் தேர்தலில் மூன்றாவது இடத்தை பிடித்த எதிர்க் கட்சித்தலைவர் பியர் மம்பௌண்டவ் அவர்கள் இந்த மோதல்களில் காயமடைந்தார். அவர் தலையிலும் தோள்பட்டையிலும் கடுமையாக காயமடைந்ததாக கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதலில் சிறையின் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பல நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்ததோடு, அந்த பகுதியில் இருந்த பிரெஞ்சு தூதரகம் உள்ளிட்ட பல கட்டிடங்களுக்கும் தீயிட்டனர். போர்ட் கெண்டில் என்ற இடத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.


தனது 10,000 பிரெஞ்சு குடிமக்களையும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு காபொனின் முன்னாள் ஆட்சியாளரான பிரான்ஸ் அறிவித்துள்ளது.

மூலம் தொகு